பிக்பாஸ் சீசன்-5 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் மிகப் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வீடியோ இன்று காலை வெளியாகியிருந்தது.
#Day1 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 10 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/vFDWqexaSj
— Vijay Television (@vijaytelevision) October 4, 2021
அதில் பிக்பாஸ் வீட்டின் முதல் வார கேப்டன் பதவிக்கு போட்டியிட ராஜு, நமீதா, பவானி, நிரூப், சின்ன பொண்ணு ஆகியோர் முன்வருகின்றனர். இந்நிலையில் இரண்டாவது புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. செம ரகளையான இந்த புரோமோவை பார்த்த ரசிகர்கள் இன்றைய எபிசோடைக்காண மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.