Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் சீசன் 5-யில் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்?… வெளியான சூப்பர் தகவல்…!!!

பிக்பாஸ் சீசன்- 5 நிகழ்ச்சியில் சார்பட்டா பரம்பரை பட நடிகர் ஒருவர் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் 5-வது சீசன் தொடங்கப்பட உள்ளது . சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான புரோமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . மேலும் இந்த சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் பற்றிய தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது.

 

santhosh prathap: Santhosh Prathap to play a crucial role in Mr  Chandramouli | Tamil Movie News - Times of India

இந்நிலையில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன் நடிகர் சந்தோஷ் பிரதாப் ஓ மை கடவுளே, இரும்பு மனிதன், பயமா இருக்கு, தாயம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |