# பிக்பாஸ் சீசன்-6 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக உள்ளே செல்பவர் ஜிபி முத்து ஆவார். நெல்லையை சேர்ந்த இவர் டிக் டாக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளஙக்ளில் பிரபலம் ஆனார்.
# இதையடுத்து 2வது போட்டியாளராக இசைக் கலைஞரான அசல் கொலார் பிக்பாஸ் வீட்டுக்கு சென்றுள்ளார். இவர் யூடியூபில் ஹிட்டான ஜோர்தால என்ற பாடல் உட்பட பல்வேறு பாடல்களை பாடியுள்ளார்.
# 3-வது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் ஷிவின் கணேசன் சென்றுள்ளார். இவர் ஒரு திருநங்கை என்பது கவனிக்கத்தக்கது.
# 4வது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் நடிகர் அசீம் சென்று இருக்கிறார்.
# அதன்பின் நடன இயக்குனர் ராபர்ட் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல இருக்கிறார். இவர் பல பிரபல நடிகர்களின் திரைப்படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
# அடுத்து மாடல் அழகி ஷெரினா பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கிறார். சூப்பர் மாடல் ஆன இவர் இந்த சீசனில் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
# பிக்பாஸ் வீட்டிற்குள் அடுத்த போட்டியாளராக கிரிக்கெட்வீரர் ராம் ராமசாமி செல்ல உள்ளார்.
# அதன்பின் பிக்பாஸ் வீட்டுக்குள் ஏடிகே செல்ல இருக்கிறார். ராப் பாடகரான இவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் கடல் படத்தில் இடம்பெற்ற பாடல், அச்சம் என்பது மடமையடா படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் உட்பட பல பாடல்களை பாடியுள்ளார்.