பிக்பாஸ் பிரபலம் சுஜா வருணியின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது .
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் வைல்ட் கார்டு போட்டியாளராக கலந்துகொண்டவர் சுஜா வருணி. ஏற்கனவே பல படங்களில் நடித்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அதிகளவு பிரபலமடைந்தார் . இதையடுத்து இவர் நடிகர் சிவக்குமாரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
https://twitter.com/sujavarunee/status/1387299207900397571
மேலும் அவ்வப்போது சுஜா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் சுஜா தனது டுவிட்டர் பக்கத்தில் வலிதான் வளர்ச்சி, வளர்ச்சி தான் மாற்றம், மாற்றமே முக்கியம் என பதிவிட்டு தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் .