பிக்பாஸிலிருந்து வெளியேற ஜிபி முத்து முடிவு எடுத்ததால் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்பொழுது ஆரம்பித்துள்ளது. இதில் சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு அதிகம் தெரிந்தவர்களாக இருக்கின்றார்கள். டிக் டாக் மூலம் பிரபலமாகிய ஜி.பி.முத்து இந்த சீசனில் போட்டியாளராக களம் இறங்கினார். முதல் நாள் பிக்பாஸ் வீட்டுக்குள் கமலால் அனுப்பப்பட்ட போட்டியாளர்களில் ஒருவரான ஜி.பி முத்து வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக இருக்கின்றார்.
இவருக்கு இணையத்தில் லெட்டர் படிக்கும் வீடியோக்கள் பார்ப்பதற்கு என்று தனி ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. இந்த நிலையில் தற்போது பிக்பாக்ஸில் என்ட்ரி கொடுத்துள்ளார். சென்ற சில நாட்களாகவே ஜிபி முத்து டல்லாக இருந்த நிலையில் தற்போது தனக்கு குழந்தைகள் ஞாபகம் இருப்பதால் வீட்டிற்கு போக வேண்டும் எனக் கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். மேலும் பிக்பாஸ் சமாதானம் செய்தும் அவர் கேட்கவில்லை.
இந்த நிலையில் போட்டியாளர்களை சந்தித்த கமல் ஜிபி முத்துவுடன் பேசிய போது அவர் தனது குழந்தைகளுக்கு சுகம் இல்லாத காரணத்தால் பிள்ளையை பார்க்க வேண்டும். அதற்கு கமல் உங்களுக்கு நிறைய ரசிகர்களுடைய ஆதரவு இருக்கின்றது. உங்க பையன் இதை பார்த்துட்டு இருப்பார். இதுக்கு மேல உங்களோட முடிவு என்ன என கேட்டு இருக்கின்றார். பிக்பாஸ், கமல் எடுத்துக் கூறியும் ஜிபி முத்து வெளியேறி இருப்பதாக செய்தி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.