Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் ஜூலியின் வித்தியாசமான நிழற்புகைப்படங்கள்… வலைதளங்களில் வைரல் …!!!

பிக்பாஸ் பிரபலம் ஜூலியின் நிழல் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது .

தமிழ் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொள்வதற்கு முன்னர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீர தமிழச்சி என பெயர் வாங்கியவர் ஜூலி . ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் தன் பெயரை முழுமையாக கெடுத்துக் கொண்டார் . அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் போது தனது ஒட்டுமொத்த இமேஜையும் இழந்துவிட்டார். பிக்பாஸில் இருந்து வெளியே வந்த அவருக்கு பல எதிர்ப்புகள் இருந்தாலும் அதை தைரியமாக கடந்து வந்தார்.

இதையடுத்து திரைப்படங்களிலும் ,தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. இதனிடையே அவ்வப்போது சமூக வலைத்தள பக்கத்தில் தனது அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார். இந்நிலையில் இன்று தனது வித்தியாசமான நிழல் புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விதவிதமான போஸ்களில் அவர் எடுத்துள்ள இந்த நிழற்புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Categories

Tech |