Categories
சினிமா

“பிக்பாஸ் நடிகையின் போட்டோ ஷூட்டா”…. கழுவி ஊத்திய நெட்டிசன்கள்…. யாருனு பாருங்க….!!!

நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்ட புகைப்படத்தினை பார்த்து சிலர் மோசமான கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வர ஆரம்பித்தவர் நடிகை யாஷிகா ஆனந்த்.  இவர் துருவங்கள் பதினாறு என்ற  திரைப்படம் மூலம் அறிமுகமானவர். இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டார். இதில் மக்களிடையே பெரிய ஆதரவைப் பெறவில்லை என்றாலும் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றார்.

இதனைத் தொடர்ந்து சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், போட்டோ ஷூட் போன்றவற்றில் பிஸியானார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் பெரிய விபத்தில் மாட்டிக்கொண்டு, படுத்த படுக்கையாக நடக்க முடியாமல் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி உள்ள அவர் மறுபடியும் போட்டோ ஷூட்டில் இறங்கிவிட்டார். அண்மையில் அவரது  புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டார். இதனைப் பார்த்து  சிலர் மோசமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Categories

Tech |