பிக்பாஸ் பிரபலம் நமீதா மாரிமுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடக்கப்பட்ட பிக்பாஸ் சீசன்-5 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் நமீதா மாரிமுத்து என்ற திருநங்கையும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். திருநங்கை ஒருவர் போட்டியாளராக கலந்துகொள்வது தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.instagram.com/reel/CVLh4G8hiNa/?utm_source=ig_embed&ig_rid=6e9c84a4-8925-4e39-b1ad-224b03508066
மேலும் இந்த நிகழ்ச்சியில் நமீதா மாரிமுத்து, தான் கடந்து வந்த கஷ்டங்கள் குறித்து பேசி அனைவரையும் கண்கலங்க வைத்தார். இவர் இறுதிப்போட்டி வரை செல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், மருத்துவ காரணங்களுக்காக ஒரே வாரத்தில் வெளியேறிவிட்டார். இந்நிலையில் நமீதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின் முதல் முறையாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ஏழை மக்களுக்கு நமீதா இலவசமாக உணவு வழங்குகிறார். அவரின் இந்த செயலுக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.