பிக்பாஸில் இருந்து வெளியேறிய நிஷா டிவி ஷோவில் பங்கேற்றுள்ள வீடியோ வெளியாகியுள்ளது .
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 வது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் அறந்தாங்கி நிஷா . இவர் இந்த நிகழ்ச்சிக்கு முன்னரே கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் . தொடர்ந்து பல டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தனது நகைச்சுவை திறனால் மக்களை மகிழ்வித்து வந்தார் . இவர் மாரி-2, ஆண்தேவதை ,கலகலப்பு-2, கோலமாவு கோகிலா ,இரும்புத்திரை உள்ளிட்ட சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்து அசத்தி இருந்தார்.
இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சில வாரங்களுக்கு முன் மக்களின் குறைவான வாக்குகளை பெற்று வெளியேற்றப்பட்டார் . இதன்பின் அவர் வீட்டிற்கு சென்று வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வந்தது . இந்நிலையில் பிக்பாஸுக்கு பின் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ள நிஷாவை விஜய் டிவி பிரபலங்கள் புகழ் மற்றும் குரேஷி கலாய்க்கும் வீடியோ வெளியாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது .