Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள்

“பிக்பாஸ்” பாணியில் “லாக் கப்”… பிக்பாஸை முறியடிக்குமா லாக் அப்…???

பிக்பாஸ் நிகழ்ச்சி பாணியில் உருவாகும் லாக் கப் நிகழ்ச்சிக்கு தடை கோரி தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று வழக்கு தொடர்ந்துள்ளது.

பிக் பாக்ஸ் நிகழ்ச்சியானது வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வந்தது. இதன் காப்புரிமை இன்றளவும் வெளிநாட்டு நிறுவனத்திடமே உள்ளது. பிக்பாக்ஸ் முதன்முதலில் பாலிவுட்டில் 2006 ஆம் வருடம் தொடங்கப்பட்டது. இது 15 எபிசோடுகளை கடந்து உள்ளன. இது தமிழ், மலையாளம், தெலுங்கு முதலியவற்றிலும் இதே பாணியில் பின்பற்றப்படுகின்றது. தமிழில் ஐந்து எபிசோடுகளை கடந்த பிக்பாக்ஸ் தற்போது ஓடிடியில் இருபத்திநான்கு மணிநேரமும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.

பிக்பாக்ஸ் போலவே தற்போது இந்தியாவில் மற்றொரு நிகழ்ச்சி உருவாக்க முயற்சித்து வருகின்றனர். தயாரிப்பாளர் ஏக்தா கபூர் இந்நிகழ்ச்சியை தயாரிக்கின்றார். இந்த நிகழ்ச்சிக்கு “லாக் கப்” என்று பெயரிடப்பட்டிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் 100 நாள் பிக்பாஸ் வீட்டிலேயே இருக்க வேண்டும். வெளி உலகுடன் தொடர்பு இருக்கக் கூடாது. ஆனால் மற்ற சொகுசு வாழ்வை அனுபவித்துக் கொள்ளலாம். ஆனால் லாக் அப் நிகழ்ச்சியானது 72 நாட்கள் சிறைவாசம் போல் இருக்கவேண்டும். இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு தான் இருப்பார்கள். அவர்கள் எந்த ஒரு வசதியும் இல்லாமல் சிறையில் இருக்க வேண்டும். கூடிய விரைவில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு ஹைதராபாத்தில் இருக்கும் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று தடை கேட்டு வழக்கை தொடுத்துள்ளது. அந்த நிறுவனம் தலைப்பு, போட்டியின் விதிமுறை எங்களுக்கு உரியது. அதை நாங்கள் காப்புரிமை செய்துள்ளோம். ஆகையால் லாக் கப் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என கூறியிருக்கின்றன. நீதிமன்றம் இதை விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக செய்தி வெளிவந்திருக்கின்றன.

Categories

Tech |