பிக்பாஸ் பிரபலங்கள் ஜூலி, சோம்சேகர் இருவரும் ஏழு வருடங்களுக்கு முன்பு இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ஜூலி. இவர் இதற்குமுன் ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமடைந்தவர். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் இவர் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் ஜூலி இந்த நிகழ்ச்சி மூலம் அதிக அளவு ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தார். இந்நிலையில் ஜூலி பிக்பாஸ் பிரபலம் சோம் சேகருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட சோம் இறுதிப் போட்டி வரை சென்று ஐந்தாவது இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது . தற்போது சோம் சேகர் மற்றும் ஜூலி இருவரும் ஏழு வருடங்களுக்கு முன்பு இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஜூலி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஜூலி சோம் இருவரும் நீண்ட கால நண்பர்களா? என கேள்வி எழுப்பி வருகின்றனர் .