மலையாளம் பிக்பாஸ் சீசன் 2வில் பங்கேற்ற பிரபல மலையாள சினிமா மற்றும் மேடைப் பாடகர் சோம தாஸ் திடீரென உயிரிழந்தார்.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் கொரோனா பாதிப்பு இன்னும் குறைந்தபாடில்லை. தற்போது வரை கொரோனாவிற்கு அரசியல்வாதிகள், திரை பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் என அனைவரும் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் பிரபல மலையாள சினிமா மற்றும் மேடைப் பாடகர் சோம தாஸ் (42) திடீரென இன்று உயிரிழந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இவ்வாறு மலையாளம் பிக் பாஸ் சீசன் 2வில் பங்கேற்றுள்ளார்.
மேலும் பல்வேறு படங்கள் மேடைகளில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். தமிழகம் உட்பட மாநிலங்கள் வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.