Categories
உலக செய்திகள்

பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியாவின் தந்தை….. மாரடைப்பால் உயிரிழப்பு…. உருக்கமான வீடியோ…!!

பிக்பாஸ் பிரபலமான லாஸ்லியாவின் தந்தை மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த பிக்பாஸ் பிரபலமான லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் தற்போது மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த செய்தி கேட்ட லாஸ்லியாவின் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் சமூக வலைதளங்களில் லாஸ்லியா தன்னுடைய தந்தை தனக்கு எவ்வளவு பிடிக்கும்? அவர் தன்னை எப்படியெல்லாம் பார்த்துக் கொண்டார்? என்பதை உருக்கமாக பேசிய வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது . அதில் லாஸ்லியா கூறுகையில், “நான் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ஒரு வேலையில் இருந்தேன். அப்போது என்னுடைய சம்பளம் என் தேவைக்கு மட்டுமே சரியாக இருக்கும்.

ஆனால் அதையெல்லாம் அப்பா புரிந்து கொண்டு எனக்கு பணம் அனுப்பி வைப்பார். அதுமட்டுமல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு நிறைய உடைகள் வேண்டும் என்பதால் என்னுடைய தந்தை அதிக அளவில் பணம் கொடுத்து உதவினார். தற்போது நான் இருக்கும் இந்த பீல்ட் அப்பாவுக்கு பிடிக்கவில்லை என்றாலும் எனக்கு பிடிக்கிறது என்பதற்காக என்னை உற்சாகப்படுத்துகிறார், ஊக்கப்படுத்துகிறார்கள். மேலும் இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள் அப்பா” என்று கூறியுள்ளார். இந்த வீடியோ லாஸ்லியாவின் ரசிகர்களால் அதிக அளவில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

Categories

Tech |