Categories
சினிமா

பிக்பாஸ் பிரோமோ…. அம்மாவை பார்த்து கண்கலங்கும் அபிஷேக்…. இணையத்தில் வைரல்…!!!

பிக்பாஸ் கொண்டாட்டம் பிரோமோவில் அபிஷேக் அவர் அம்மாவை கட்டியணைத்து அழுந்து கொண்டிருப்பதுபோல் வெளியாகியுள்ளது.

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 5-யில்  பங்கேற்றவர் அபிஷேக். இணையதள மீடியாக்களில் பணியாற்றியதன் மூலம் அதிக நட்சத்திரங்களை பேட்டி எடுத்ததால் மக்களிடையே பிரபலமடைந்தார். அதற்குப்பின் அவர் சொந்தமாக ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்தார். அதில் படங்களை விமர்சித்து வீடியோக்களை பதிவிட்டு வந்தார். பிறகு பிக்பாஸில் போட்டியாளராக பங்கேற்றார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின் வைல்ட் கார்டு என்ட்ரியாக மீண்டும் பிக்பாக்ஸுக்குள் வந்தார். மீண்டும் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் கொண்டாட்டம் பிரோமோவில் அபிஷேக் மேடையில் தன் அம்மாவை கட்டி அணைத்து அழுவது போல் வீடியோவில் வெளிவந்துள்ளது.

Categories

Tech |