Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் போட்டியை வென்ற பிரபலம்-WOW…!!

பிக்பாஸ்- 4 நிகழ்ச்சியின் டைட்டிலை நடிகர் ஆரி கைப்பற்றி வெற்றி வாகை சூட்டியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 4ந் தேதிஆரம்பித்தது. நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியானது 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதில் இறுதிப்போட்டிக்கு ஆரி, பாலா, சோம், ரியோ மற்றும் ரம்யா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நடிகர் ஆரி வெற்றி பெற்று டைட்டிலை கைப்பற்றியுள்ளார். பாலாஜி முருகதாஸ் இரண்டாவது போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இன்றைய கடைசி எபிசோட்ல் சோம் சேகர், ரம்யா பாண்டியன், ரியோ ஆகியோர் வெளியேறினர். இதையடுத்து மக்கள் அளித்த வாக்கு அடிப்படையில் ஆரி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

 

Categories

Tech |