இந்தி பிக்பாஸ் 10வது சீசனில் பங்கேற்ற மிக முக்கிய பிரபலம் சுவாமி ஓம் காலமானார்.
இந்தி பிக்பாஸ் 10வது சீசனில் பங்கேற்ற சர்ச்சைக்குரிய பிரபலம் சுவாமி ஓம் (63) டெல்லியில் இன்று காலமானார். சில நாட்களுக்கு முன்பு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட அவர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்தாலும் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இவர் பிக் பாஸ் டாஸ்கில் சக போட்டியாளர்கள் முன்னிலையில் சிறுநீர் கழித்து சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவுக்கு முக்கிய பிரபலங்கள் மற்றும் திரையுலகினர் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.