Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை… வெளியான புதிய திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்..!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை லாஸ்லியாவின் “கூகுள் குட்டப்பா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இளம் நடிகை லாஸ்லியாவுக்கு பட வாய்ப்புகளும் அதிகம் கிடைத்துள்ளது. மேலும் லாஸ்லியா கூகுள் கிட்டப்பா, பிரண்ட்ஷிப் உள்ளிட்ட பல படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.

அதில் பிரண்ட்ஷிப் படத்தின் டீஸர், ஃபர்ஸ்ட் லுக், டிரைலர் என பல விஷயங்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது லாஸ்லியா மற்றும் தர்ஷன் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கும் “கூகுள் குட்டப்பா” படத்தினுடைய ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

Categories

Tech |