Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு இவ்வளவு திறமையா?… சிவானி வெளியிட்ட புகைப்படம்… இணையத்தில் வைரல்…!!!

பிக்பாஸ் பிரபலம் சிவானி வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் சிவானி . இவர் பகல் நிலவு சீரியலில் நடித்து பிரபலமடைந்தவர். இதையடுத்து இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் இவர் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆரம்பத்தில் சரியாக விளையாடாத சிவானி இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடி சிங்கப் பெண்ணாக வெளியேறினார்.

இந்நிலையில் சிவானி தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஸ்டைலாக போஸ் கொடுத்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் இந்தப் புகைப்படத்தை எடுத்தது பிக்பாஸ் பிரபலம் ரம்யா பாண்டியன் என குறிப்பிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ரம்யா பாண்டியனின் போட்டோகிரபி திறமைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த புகைப்படத்திற்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |