Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் ரியோவின் ‘பிளான் பண்ணி பண்ணனும்’… ரிலீஸ் குறித்த அறிவிப்பு…!!!

பிக்பாஸ் பிரபலம் ரியோ நடிப்பில் உருவாகியுள்ள பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக கலக்கி வந்த ரியோ ராஜ் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் . இதையடுத்து இவர் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனல் கலந்து கொண்டு அதிக அளவில் பிரபலமடைந்தார் . இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி வரை சென்ற ரியோ மூன்றாவது இடத்தை பெற்றிருந்தார்.

மேலும் ரியோ இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் பிளான் பண்ணி பண்ணனும் என்ற படத்தில் நடித்து முடித்திருந்தார். பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ரம்யா நம்பீசன் ,தங்கதுரை ,பால சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படம் வருகிற ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் .

Categories

Tech |