பிக்பாஸ் வீட்டின் முன் டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் 5-வது சீசன் தொடங்கப்பட உள்ளது. இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான முதல் புரோமோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இந்த சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் பட்டியல் ஒன்று இணையத்தில் வைரலானது.
https://www.instagram.com/p/CTWPqstC4b9/
அதில் ரம்யா கிருஷ்ணன், மைனா நந்தினி, எம்.எஸ்.பாஸ்கர், லட்சுமி ராமகிருஷ்ணன், டிக்டாக் ஜி.பி.முத்து, ஷகிலாவின் மகள் மிளா, நடிகர் ஜான் விஜய், குக் வித் கோமாளி பிரபலங்கள் பாபா பாஸ்கர், சுனிதா, கனி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது. ஆனால் இந்த பட்டியல் உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் டிக்டாப் பிரபலம் ஜி.பி.முத்து பிக்பாஸ் வீட்டின் முன் நிற்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பிக்பாஸ்-5 நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து தான் முதல் போட்டியாளர் என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.