Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரியாகும் சின்னத்திரை நடிகர்… வெளியான தகவல்…

பிக்பாஸ் -4  நிகழ்ச்சியில் பிரபல சின்னத்திரை நடிகர் அஸீம் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் -4ஆம் தேதி  தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் இதுவரை ரேகா ,வேல் முருகன் ,சுரேஷ் ஆகியோர்  வெளியேற்றப்பட்டுள்ளனர் .மேலும்  அர்ச்சனா ,சுசித்ரா ஆகியோர்  வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்துள்ளனர்.

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற சோம், சம்யுக்தா, அனிதா, ரியோ, ஆரி, சுசித்ரா ,பாலா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர். இவர்களில் இந்த வாரம் சுசித்ரா வெளியேறப் போவதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் பிரபல சின்னத்திரை நடிகர் அஸீம் வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |