பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் வருகைதரும் பிரீஸ் டாஸ்க் நடைபெறுகிறது. இன்று வெளியாகியுள்ள முதல் புரோமோவில் கேப்ரில்லாவின் தாயார் பிக்பாஸ் வீட்டுக்குள் வருகிறார் . அவர் வந்தவுடன் மகிழ்ச்சியில் மகளை கட்டியணைக்கிறார் . இதன்பின் ஆரியை ‘நெடுஞ்சாலை’ படத்திலேயே பார்த்திருப்பதாக கூறுகிறார் .
#Day88 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/ZuG77kNHvx
— Vijay Television (@vijaytelevision) December 31, 2020
பின்னர் கேபியை தனியாக அழைத்து சென்று அட்வைஸ் கொடுக்கிறார் . அப்போது பேசிய கேபி ‘நான் டாஸ்கை சரியாக செய்தாலும் ஒரு சிலர் என்னை மட்டம் தட்டுகின்றனர் . சண்டை போட்டு எதையும் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என விட்டுவிட்டேன்’ என்கிறார்.