Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் வீட்டுக்கு திரும்ப போனா…. ”எல்லாரையும் வச்சு செய்வேன்” சுரேஷ்சக்ரவர்த்தி ….!!

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் மீண்டும் சென்றால் எல்லோரையும் வச்சி செய்வேன் என போட்டியாளர்  சுரேஷ்சக்ரவர்த்தி தெரிவித்துளார்.  

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் சவாலான போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர்  சுரேஷ் சக்ரவர்த்தி ஆகும். இவர் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டத்தில் அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரை வெளியேற்றப்பட்டதில் ஏதோ  சூழ்ச்சி நடந்திருப்பதாக என்னி  சிலர்  சந்தேகம் அடைந்து வருகின்றனர்.  இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின் அவர் தனது யூட்யூப் சேனல் வழியாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

அப்பொழுது  கடந்த சீசனில் வனிதா சென்றது போல் நீங்கள்  வைல்ட்கார்டு போட்டியாளராக கூப்பிட்டால் பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வருவீர்களா என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார் அதற்கு அவர் கூறியதாவது. கண்டிப்பாக நான் செல்வேன் நீங்கள் என் மீது இவ்வளவு அன்பு வைத்திருப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை ஆனால் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றாள் எல்லோரையும் வெச்சு செய்வேன் என்று கூறியிருக்கிறார்.  இனி தினசரி பிக் பாஸ் நிகழிச்சியை விமர்சனம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |