Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் வீட்டுக்கு வந்த சகோதரரை கலாய்த்து தள்ளிய பாலாஜி… வெளியான மூன்றாம் புரோமோ…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வழக்கமாக இறுதி நாட்களில் போட்டியாளர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் வருகை தரும் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெறும் . இந்நிலையில் இன்று வெளியாகி இருந்த முதல் புரோமோவில் சிவானியின் தாயார் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளார் . முதலில் கண்கலங்கி கட்டியணைத்த ஷிவானியின் தாய் பின்னர் அவரை தனியே அழைத்துச் சென்று கேள்விகள் கேட்கிறார் .

இதையடுத்து வெளியான  இரண்டாவது புரோமோவில் என்னால்தான் பிரச்சனை என பாலாஜி வருத்தப்படுகிறார் . தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில் பாலாவின் சகோதரர் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தருகிறார் ‌ . சகோதரரை பார்த்ததும் ‘உனக்கு போய் நான் அன்ஃப்ரீஸ் ஆகி விட்டேனே’ என கலாய்க்கிறார் பாலா . இதன் பின்னர்’என்னை பார்த்த உடனே நீ கட்டிப்பிடித்து அழுவன்னு நினைத்தேன்’ என்கிறார் பாலாவின் சகோதரர் .

Categories

Tech |