இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து ஐக்கி பெர்ரி எலிமினேஷன் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சியில் இதுவரை நடியா, நமிதா மாரிமுத்து, சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா மற்றும் இசைவாணி ஆகியோர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி உள்ளனர்.
சமீபத்தில், வைல்ட் கார்ட் எண்ட்ரியாக அமீர் மற்றும் சஞ்சீவ் ஆகியோர் வீட்டிற்குள் வந்தனர். இந்நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து ஐக்கி பெர்ரி எலிமினேஷன் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அவரது ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை அளித்துள்ளது.
Eliminated #IykkiBerry #biggbosstamil #Biggbosstamil5 pic.twitter.com/ccwmnDWEeR
— Imadh (@MSimath) November 27, 2021