பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்து குக் வித் கோமாளி பிரபலம் கனி விளக்கமளித்துள்ளார் .
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் கனி . இவர் இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடந்த அரையிறுதி சுற்றில் சிறப்பாக சமைத்து முதலாவது பைனலிஸ்டாக தேர்வு செய்யப்பட்டார் . இந்நிலையில் கனி பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது . இதுகுறித்து கனியிடம் அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர் .
இதற்கு பதிலளித்த கனி ‘இதுவரை பிக்பாஸ் குழுவினர் என்னை அணுகவில்லை. அப்படி யாராவது என்னை அணுகினால் அது குறித்து நான் அப்டேட் செய்கிறேன்’ என கூறியுள்ளார். மேலும் சில ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போக வேண்டாம் என கனிக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தால் கனி செல்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.