பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதில் முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகேன், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் டைட்டிலை வென்றனர். விரைவில் பிக்பாஸ்-5 நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது. கடந்த நான்கு சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தான் 5-வது சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறார்.
சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இந்த சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல் அவ்வப்போது இணையத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா பிக்பாஸ் சீசன்-5 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இதனால் இந்த சீசன் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.