பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் பிரபல சீரியல் நடிகர் கார்த்திக் ராஜ் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. கடந்த சீசன் கொரோனா பரவல் காரணமாக அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் நிறைவடைந்தது. அதேபோல் இந்த சீசனும் அக்டோபர் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது.
மேலும் இந்த சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில் பிக்பாஸ்-5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சீரியல் நடிகர் கார்த்திக் ராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் பரவி வருகிறது. இவர் செம்பருத்தி சீரியலில் கதாநாயகனாக நடித்து பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .