பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் நடிகை சகிலாவின் வளர்ப்பு மகள் மிலா கலந்துகொள்ள இருப்பதாக தகவல் பரவி வருகிறது .
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது . விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கப்பட உள்ளது. ஜூன் மாதம் தொடங்க உள்ள பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல் அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதில் குக் வித் கோமாளி கனி, சுனிதா, பவித்ரா மற்றும் நடிகர்கள் ராதாரவி, மன்சூரலிகான் ஆகியோர் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
மேலும் பிளாக் ஷீப் யூடியூப் சேனல் ஆர்.ஜே வினோத் மற்றும் முரட்டு சிங்கிள் இனியன் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி பிரபலம் ஷகிலாவின் மகள் மிலாகலந்துகொள்ள இருப்பதாக தகவல் பரவி வருகிறது. நடிகை சகிலாவின் மகள் திருநங்கை மிலா பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.