Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ்-6…. இந்த வாரம் வீட்டிலிருந்து வெளியேறுபவர் யார்?…. லீக்காகும் தகவல்

கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வெற்றிகரமாக பிக்பாஸ் 6-வது சீசன் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் முதல் 2 வாரங்கள் முடிந்து விட்டது. இதற்கிடையில் மக்கள் மிகவும் நம்பிய ஜி.பி.முத்து அவராகவே வந்து வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறினார். மேலும் முதல் போட்டியாளராக சாந்தி வீட்டிலிருந்து வெளியேறினார். இந்த வாரத்துக்கான நாமினேஷன் லிஸ்டில் மக்கள் விரும்பிய சில போட்டியாளர்கள் இருக்கின்றனர். இதிலிருந்து யார் வெளியேறுவார் என்பது தெரியவில்லை.

எனினும் ஓட்டிங் விபரம் ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகி உள்ளது. இவ்வாரம் எலிமினேஷனுக்காக ரச்சிதா, ஜனனி, அசல், மகாலட்சுமி, ஆயிஷா, அசீம், ஏடிகே என 7 பேர் நாமினேட் செய்யப்பட்டு இருக்கின்றனர். தற்போதுவரை குறைவான வாக்குகள் பெற்று கடைசியில் இருப்பது அசல் தான். இவர் மீது சென்ற சில தினங்களுக்கு மக்களுக்கு கோபம்தான் ஏற்பட்டுள்ளது. அசல் பெண்களிடம் தவறாக நடந்து கொள்கிறார் என்ற குற்றச்சாட்டு எழும்ப, அவருக்கு வாக்குகளும் குறைவாக வந்துள்ளது.

Categories

Tech |