பிக் பாஸ் சீசன் 6-ல் போட்டியாளராக டிடி பங்கேற்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 6 வரும் அக்டோபர் ஒன்பதாம் தேதி தொடங்க உள்ளது. இந்நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குகின்றார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் விஜய் டிவி பிரபலமான தொகுப்பாளினி டிடி இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. ஆனால் இதற்கு மற்றொரு பக்கம் வாய்ப்பில்லை என கூறுகின்றார்கள். நாம் செப்டம்பர் 9ஆம் தேதி வரை டிடி கலந்து கொள்கின்றாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.