சீனியர் சிட்டிசன்கள் தங்களுடைய ஓய்வுக்கு பிறகு பெரும்பாலும் பிக்ஸட் டெபாசிட்டுகளை அதிகம் நம்புகிறார்கள். இதில் வட்டி குறைவு என்றாலும், பிக்ஸட் டெபாசிட் பாதுகாப்பாக இருப்பதினால் பெரும்பாலும் இதையே மக்கள் விரும்புகின்றனர். இந்த பிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்யும் தொகையைப் பொறுத்து அதற்கான வட்டி கிடைக்கும். இதையடுத்து சில முக்கிய வங்கிகளில் வழங்கப்படும் பிக்சட் டெபாசிட் தொகைக்கான வட்டி விகிதம் குறித்து பார்ப்போம். இந்த வங்கிகள் அனைத்தும் பிக்ஸட் டெபாசிட் தொகைக்கான வட்டி விகிதத்தை சமீபகாலத்தில் அதிகரித்துள்ளது. அதன்படி HDFC வங்கியில் 2 கோடிக்கும் குறைவாக இருக்கும் பணத்திற்கு 2.50 சதவீதம் முதல் 5.6 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது.
இது கடந்த ஏப்ரல் 20-ம் தேதியிலிருந்து அமுலில் இருக்கிறது. இதனையடுத்து SBI வங்கியில் நீங்கள் முதலீடு செய்யும் தொகையைப் பொறுத்து 2.9 சதவீதம் முதல் 5.4 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. இதில் சீனியர் சிட்டிசன்களுக்கு 3.4 சதவீதம் முதல் 6.50 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டம் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து அறிமுகத்தில் இருக்கிறது. அதன்பிறகு ICICI வங்கியில் 2.50 சதவீதம் முதல் 5.60 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. இது கடந்த ஜனவரி மாதம் முதல் அமுலில் இருக்கிறது. மேலும் பணவீக்கத்தின் அளவைப் பொருத்தே வங்கிகள் நீங்கள் வங்கியில் சேமிக்கும் பணத்திற்கான வட்டி விகிதத்தை நினைக்கிறது.