Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் அசீமின் உண்மை குணம் எது?… குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்கு… நடிகர் அருண்குமார் ராஜன் சொன்ன பதில்…..!!!!

பிக்பாஸ் வீட்டில் நுழைந்த நாள் முதல் தன்னைத்தானே பெரிய ஆள் என காட்டிக்கொள்ளும் அடிப்படையில் பெருமை பேசி அடிக்கடி பல்பு வாங்குகிறார் அசீம். மேலும் சக ஹவுஸ்மேட்டுகளில் யாரையாவது பிடித்து சண்டை போடுவது, கத்திபேசுவது, பெண்களிடம் அதிகாரத்தை காட்டுவது என இன்று வரை சக போட்டியாளர்களை அமைதியாக்கி வென்று வருகிறார். எனினும் டாஸ்க்குகளில் பெரியதாக பெர்பாமன்ஸ் காட்டுவதில்லை. அசீமை பிக்பாஸ் வீட்டில் மற்றும் வெளியில் வெறும் வாய்சவுடால் என்றே பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

அதற்கேற்றார் போல் தன்னை தமிழ்பற்று மிக்கவராக காட்டிக் கொள்ளும் அசீம் சமீபத்தில் தப்புதப்பாக தமிழ் எழுதி சிக்கி கொண்டார். இதற்கிடையில் உண்மையான அசீமின் குணமே இப்படித் தானா? (அ) பொய்யாக விளையாடுகிறாரா? என ரசிகர்களே குழம்பி போய் விட்டனர். இந்த நிலையில் அசீமின் சக நடிகரான அருண்குமார் ராஜன் அண்மையில் பேட்டி அளித்தபோது  “அசீமுடன் பூவே உனக்காக தொடரில் நடித்திருக்கிறேன்.

அவர் உண்மையான முகம் இது தான். அதாவது பெண்களை எப்போதுமே டாமினேட் செய்வார். ஒரு முறை அந்த சீரியலில் நடித்த ஹீரோயினை தகாத வார்த்தையால் திட்டி விட்டார். இதன் காரணமாக அந்த ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்த அனைவருமே அசீம் மன்னிப்பு கேட்டால் தான் வேலை செய்வோம் என கூறிவிட்டனர். தயாரிப்பாளர் வற்புறுத்தி கேட்டு கொண்டதால் மட்டுமே அசீம் அன்று மன்னிப்பு கேட்டார். சீரியலில் வரும் வசனத்தில்கூட ஒரு பெண் தன்னை “டா” போட்டு கூப்பிடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்” என்று கூறியுள்ளார்

Categories

Tech |