எதிர்பாராததை எதிர் பாருங்கள் என கூறி பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடிக்கடி எதிர்பார்க்காத பல்வேறு விஷயங்கள் நடந்து வருகிறது. அதன்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் கமல் தனலட்சுமிக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். கடந்த வாரம் நடைபெற்ற ஸ்வீட் கடை டாஸ்கில் எப்படியோ ஏமாற்றி தனலட்சுமி அணி ஜெயித்தது. அதனை குறும்படமாக கமல் போட்டுக்காட்டிய நிலையில் அனைவரும் அதை பார்த்து சிரிக்கின்றனர்.
இதையடுத்து அனைவர்போல நானும் சிரித்துக்கொண்டிருக்க இயலாது என கூறும் கமல், தனலட்சுமியின் வெற்றி பறிக்கப்படுவதாக அறிவிக்கிறார். இதனால் நாமினேஷனிலிருந்து அவர் இந்த வாரம் தப்பமுடியாது. அதன்பின் நேர்மையாக விளையாடிய விக்ரமன் தரப்புக்கு தான் இந்த வெற்றி சேரும் என்று கமல் அறிவித்தார். அதனை தொடர்ந்து தனலட்சுமி இதற்காக கண்ணீர்விட்டு அழுதார் என்பது குறிப்பிடத்தக்கது.