இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோவானது வெளிவந்து இருக்கிறது. இவற்றில் ஜி.பி. முத்துவுக்கு பரிச்சையமான போஸ்ட் பாக்ஸை பிக்பாஸ் வீட்டிற்கு கமல் அனுப்பி வைத்துள்ளார். உங்களுக்கு எந்த 2 நடிகைகளுடன் இணைந்து நடிக்க வேண்டும் என ஆசை இருக்கிறது? என கேள்வி கேட்டு அந்த போஸ்ட் பாக்சில் லேட்டர் ஒன்று இருக்கிறது.
#Day7 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/ek6uOyPMvc
— Vijay Television (@vijaytelevision) October 16, 2022
இதற்கு பதில் அளிக்கும் ஜி.பி. முத்து, நயன்தாரா, சிம்ரன் என கூற என்னுடைய வேலைக்கே வேட்டு வைக்க பார்க்குறீர்களே என்று கமல் கூறுகிறார். அதேபோன்று வீட்டிற்குள் உள்ள இருவரை ஹீரோயினாக தேர்ந்தெடுக்க வேண்டும் எனில் யாரை தேர்ந்தெடுப்பீர்கள் என கமல் கேட்க, ஜி.பி. முத்து மௌனமாக உள்ளார்.