பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. முந்தைய சீசன்களை போன்றே இந்த சீசனையும் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கவிருக்கிறார். தற்போது யாரெல்லாம் பிக் பாஸ் சீசன்6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உறுதியாகி விட்டார்கள் என்பதை பற்றி பார்ப்போம். பாரதிகண்ணம்மா சீரியல் புகழ் ரோஷினி ஹரிப்பிரியன் செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது. அவர் பாரதி கண்ணம்மா சீரியலில் நடந்ததை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் போட்டார்கள். அந்த சீரியல் போன்று பிக் பாஸ் வீட்டிலும் நடப்பார் என்று பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
அதனை தொடர்ந்து முந்தைய சீசன்கள் எப்படியோ. ஆனால் இந்த சீசனில் டிடி அக்கா நிச்சயமாக கலந்து கொள்கிறார் என்று பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். Arthritis பிரச்சினையால் அவதிப்படும் டிடி எப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியும் என்றும் கேள்வி எழுந்துள்ளது. இதனையடுத்து கோலிவுட் பிரபலமாக இருக்கும் டான்ஸ் மாஸ்டரான ராபர்ட் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கலந்து கொள்வது உறுதியாகிவிட்டது. பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியில் அவர் வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும் அவரை பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஆடவைக்கும் ஐடியாவில் தான் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார் என்று கூறப்படுகிறது.