முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டன் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இதற்கு முன்பாக மணிகண்டன் விஜய் தொலைக்காட்சியில் பல கேம் ஷோக்களில் கலந்துகொண்டிருந்தாலும் பிக் பாஸ் தான் அவரை அதிகம் பாப்புலர் ஆக்கி இருக்கிறது. அதாவது, முதலில் இருக்கும் இடம் தெரியாமல் இருந்த மணிகண்டன், அண்மை வாரங்களாக தான் வெளியில் தெரிகிறார்.
Pls show ur support and love to my brother @Manikan97622480 🙏🙏🙏 pic.twitter.com/0nXjJvFJx2
— aishwarya rajesh (@aishu_dil) November 22, 2022
இந்த நிலையில் தற்போது முதல் முறையாக மணிகண்டன் நாமினேஷன் லிஸ்டில் இடம்பிடித்து உள்ளார். இதன் காரணமாக டேஞ்சர் சோனில் அவர் இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்நிலையில் மணிகண்டனுக்கு ஆதரவு கேட்டு அவரது தங்கை ஐஸ்வர்யா ராஜேஷ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அனைவரும் மணிகண்டனுக்கு ஹாட்ஸ்டாரில் வாக்களியுங்கள்” என அவர் பதிவிட்டிருக்கிறார் .