பிக்பாஸ் பிரபலம் முகென் ராவ் கதாநாயகனாக அறிமுகமான படம் வேலன். இந்த படம் டிசம்பர் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இயக்குனர் கவின் இந்த படத்தை உருவாக்கியுள்ளார். மேலும் இந்த படத்தை ஸ்கை மேன்பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் தயாரித்துள்ளார்.
முகென் ராவுக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ளார். மேலும் பிரபு, தம்பி ராமையா, சூரி, மரிய வின்சன்ட், பிரிகிடா உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். வேலன் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் தற்போது வேலன் திரைப்பஞத்தின் என்னை ஆளும் பெண்ணிலவே ரொமான்டிக் பாடல் வீடியோ வெளியானது. பிக் பாஸ் முகென் ராவின் என்னை ஆளும் பெண்ணிலவே பாடல் வீடியோ இதோ.