பிக்பாஸ் வீட்டிற்குள் பெண்களிடம் அசல் கோளார் நடந்துகொள்ளும் விதம் பார்வையாளர்களை முகம்சுளிக்க வைத்திருக்கிறது. மகேஸ்வரி, மைனா, ரசித்தா, ஜனனி, நிவாஷினி, குயின்ஸி என அடுத்தடுத்து பல்வேறு பெண்களிடம் மோசமான வகையில் அசல் கோளார் நடந்துகொள்கிறார். இதனை பார்த்து வரும் ரசிகர்கள் பல பேரும் சமூகவலைத்தளங்கள் வாயிலாக கடுமையான விமர்சனத்தை தெரிவித்து வருகின்றனர்.
😳😳 Kolaaruuu #Asalkolaar #GPMuthuArmy #GPMuthu #BiggBossTamil #BiggBossTamil6 #BiggBoss pic.twitter.com/neKeZMMh7G
— Dr Kutty Siva (@drkuttysiva) October 22, 2022
இந்த நிலையில் நேற்றிரவு நிவாஷினியை நீச்சல் குளத்தில் தூக்கிகொண்டு போட்டுவிடுவேன் என அசல் கோளார் கூறினார். அதற்கு நிவாஷினி அது முடியாது என கூற அவரை அப்படியே அசல் கோளார் தூக்கிவிட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் பல பேரும், அசல் கோளார் நடந்துகொள்ளும் விதம் சரியில்லை என கமெண்ட் செய்து வருகின்றனர்.