பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டு இப்போது 44 நாட்கள் ஆகி விட்டது. இந்நிலையில் இந்த வாரம் முதல் நாள் தலைவரை தேர்வு செய்யும் டாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளது. அவற்றில் வீட்டின் தலைவராக மைனா தேர்வு செய்யப்பட்டதாக பிக்பாஸ் அறிவிக்கிறார். அதனை கேட்ட தனலட்சுமி பயங்கரமாக அழுகிறார். அத்துடன் மைனா தலைவர் சீட்டில் அமர்ந்திருக்க, ஆனால் தனலட்சுமி வர மறுக்கிறார். உடனடியாக ஆயிஷா வந்து தனலட்சுமியை தலைவர் கூப்பிடுவதாக கூறுகிறார்.
அப்போது தனலட்சுமி யார் தலைவர்?.. நான் யாரையும் தலைவராக ஏற்றுக் கொள்ளமாட்டேன் என கூறுகிறார். அதன்பின் அனைவரும் வந்து தனலட்சுமியை சமாதானம் செய்தனர். இதனிடையில் மறுபக்கம் மைனாவும் அழுகிறார். இது அனைத்தும் தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது. இந்த வாரம் முதல் நாளே சண்டைக்கு பஞ்சம் இன்றி இருக்கிறது என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.