பிக்பாஸ் 6-வது சீசனில் பல்வேறு துறைகளிலிருந்த கலைஞர்கள் வந்துள்ளனர். நடிகர், மாடல், சின்னத்திரை பிரபலம், மீடியா, திருநங்கை, பொதுமக்களில் ஒருவர் என அனைத்தும் கலந்த கலவையாக இந்த பிக்பாஸ் 6-வது சீசன் போட்டியாளர்கள் இருக்கின்றனர். இதில் பிக்பாஸ் 6-வது சீசனில் முதல் ஆளாக வீட்டிற்குள் சென்றவர் ஜி.பி.முத்து ஆவார். இவர் மீது மக்கள் பெரிய . எதிர்ப்பார்ப்பு வைத்தனர்.
அதாவது கண்டிப்பாக இவர் அனைவருடனும் போட்டிபோட்டு வெல்வார் என நினைத்தனர். ஆனால் மக்கள் நினைத்தபடி அது நடக்கவில்லை. ஏனெனில் ஜி.பி. முத்து சில காரணங்களால் அவராகவே வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். கடந்த அக்டோபர் 9ஆம் தேதி பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற ஜி.பி.முத்து அந்த வீட்டில் 14 தினங்கள் இருந்துள்ளார். அதன்படி அவர் மொத்தமாக ரூபாய். 2 லட்சத்திற்கு மேல் சம்பளம் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.