பிக்பாஸ் 6-வது சீசனிலிருந்து அசல் கோளாறு நேற்று எலிமினேட் ஆகியிருக்கிறார். இறுதியில் அசீம் மற்றும் அசல் கோளாறு இரண்டு பேரும் மட்டும் எலிமினேஷன் லிஸ்டில் இருந்தனர். அப்போது யார் காப்பாற்றப்படுவார் என நினைகிறீங்க என்று கமல் கேட்டபோது பல பேரும் அசல் தான் உள்ளே இருப்பார் என்று கூறினார்கள். அதிலும் குறிப்பாக நிவாஷினி அசல் கண்டிப்பாக இங்க இருக்கனும் என்று கூறினார். இதற்கிடையில் என்னை எதற்காக இங்கே நிற்கவைத்தார்கள் என தெரியவில்லை என்று அசல் கோளாறு கூறினார்.
முடிவில் அசல் எலிமினேட் ஆகி வெளியில் சென்றபின், நிவாஷினி கதறிகதறி அழுதார். இதனிடையில் அசல் கோளாறை வெளியில் அனுப்புவதற்கு முன் கமல் ஒரு விஷயம் கூறினார். அதாவது “எதற்காக இங்கே நிறுத்திட்டாங்க என கேட்டிங்க. வெளியே சென்று உங்கள் நண்பர்களிடம் கேளுங்க, சொல்லுவாங்க” என கமல் கூறினார். பெண்களிடம் எல்லை மீறியது குறித்து தான் மறைமுகமாக கமல் அப்படி கூறி வெளியில் அனுப்பிவைத்திருக்கிறார்.