Categories
இந்திய சினிமா சினிமா

“பிக் பாஸ் 4” பாதியில் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்…. வெளியான முக்கிய காரணம்….!

தெலுங்கு பிக்பாஸ் -4 நிகழ்ச்சியின் போட்டியாளர் ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக பாதியில் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் -4 வது சீசனை நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வந்தார். படப்பிடிப்பிற்காக நாகார்ஜுனா வெளிநாடு சென்று விட்டதால் அவருக்கு பதிலாக சமந்தா இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவருகிறார்.செப்டம்பர்- 6 ஆம் தேதி முதல் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் நேற்று திடீர் உடல்நலக்குறைவால் நோயல் சீன் என்ற போட்டியாளர் வெளியேற்றப்பட்டார்.


அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என தெரிவித்ததையடுத்து  போட்டியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். ஏற்கனவே கங்கவா என்ற போட்டியாளர் உடல்நலக்குறைவால் போட்டியில் இருந்து பாதியில் வெளியேற்றப்பட்டார். இவர்கள் இருவருக்கும் கொரோனா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிக்பாஸ் வீட்டில் 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக சிலரை பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |