Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் 5ல் நா இல்ல… தயவு செஞ்சு லிஸ்ட்ல இருந்து பேர் எடுத்துடுங்க…. முக்கிய பிரபலத்தின் பதிவு…!!!

பிக் பாஸ் 5 இல் நான் பங்கேற்கவில்லை என்று லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பதிவிட்டுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது. 4 சீசன்களை வெற்றிகரமாக கடந்து முடிந்த இந்நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கூடிய விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. அதற்கான புரோமோவும் வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் பிக்பாஸ் 5ல் யாரெல்லாம் போட்டியாளர்களாக பங்கேற்கிறார்கள் என்று சமூக வலைத்தளத்தில் ஒரு லிஸ்ட் வெளியாகி வருகிறது. இந்த லிஸ்டில் லட்சுமி ராமகிருஷ்ணனின் பெயரும் இடம் பெற்றிருப்பதால் அவர் தற்போது வெளியிட்டுள்ள தகவலின் படி அவர் இதில் பங்கேற்க மாட்டார் என்று தெரியவந்துள்ளது.

இதுகுறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியிருப்பதாவது, பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் நான் பங்கேற்கிறேன் என்ற தகவல் பரவி வருகிறது. ஆனால் நான் எந்த ஒரு சீசனிலும் பங்கேற்கவில்லை. அதேபோல் இப்போதும் பிக்பாஸ் 5ல் பங்கேற்கப் போவதில்லை. அதனால் தயவு செய்து அந்த லிஸ்டில் இருந்து என் பெயரை எடுத்து விடுங்கள் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |