Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் -5 சீசனுக்கு இவரு வரலையாம்…. ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்…!!!

பிக் பாஸ் சீசன்-5  விஜய் டிவியில் அக்டோபர் மாதம் ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்பட்டதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிகழ்ச்சி வழக்கம்போல கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இதற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சீசனில் இணைந்து போட்டியிட உள்ளதாக சில பிரபலங்களின் பெயர்களின் பட்டியலும் தொடர்ந்து இணையதளத்தில் வந்த வண்ணம் இருக்கிறது. அப்படி வரும் செய்திகளை சில பிரபலங்கள் மறுக்கவும் செய்து வருகின்றனர்.

சமீபத்தில் மாஸ்டர் மகேந்திரன் பிக்பாஸில் பங்கேற்பதில்லை என்று தெரிவித்திருந்தார்.  இந்நிலையில் இந்த பட்டியலில் இருந்து ஜிபி முத்துவின் பெயரும் இருந்து வந்தது. இதையடுத்து அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்ற செய்தி வெளியாகி இருக்கிறது. இதனால் அவரை எதிர்பார்த்த அவருடைய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Categories

Tech |