விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டு வருவது பிக் பாஸ். நான்கு சீசன்களை முடித்து தற்போது ஐந்தாவது சீசனின் பைனலை எட்டியுள்ளது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொருவராக வெளியேறி 5 பேர் இறுதிகட்ட போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் யார் டைட்டிலை தட்டி செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில் இன்று இந்நிகழ்ச்சியில் பைனல் நடைபெற்றது.
இதில் ராஜு பிக்பாஸ் சீசன் 5 டைட்டிலை வென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு இரண்டாவதாக பிரியங்கா மூன்றாவதாக பாவணி ரெட்டி நான்காவதாக அமீர் மற்றும் ஐந்தாவதாக நிரூப் இருப்பதாக தெரியவந்துள்ளது. ராஜு வெற்றி பெற்றது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Champions of this season#biggbosstamil #Biggbosstamil5 pic.twitter.com/87gDtVsH2L
— Imadh (@MSimath) January 15, 2022