பிக் பாஸ் சீசன் 5 தமிழ் இந்த மாதம் 3ஆம் தேதி தொடங்கப்பட்டு 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இவர்களில் நமிதா மாரிமுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இந்த வாரம் முதல் நாமினேஷன் நடைபெற்றது.
இதில் பிரியங்கா, ராஜு, இமான், நிரூப், அக்ஷரா, அபிஷேக் உட்பட 15 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்றைய எபிசோடில் யார் வெளியேறுவார்கள் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மலேசியா மாடலான நடியா சாங் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது