விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சியான இந்த பிக் பாஸ் ஆறாவது சீசன் தற்போது வெற்றிகரமாக தொடங்கி ஓடிக் கொண்டிருக்கிறது. 21 போட்டியாளர்கள் இடம்பெற கலை கட்டும் பிக் பாஸ் வீட்டில் அதிக சண்டைகள் மற்றும் பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பெரியதாக இப்போது அசீம் மற்றும் ஆயிஷாவிடம் வெடித்திருக்கிறது.
அவர்களது சண்டை பற்றி கண்டிப்பாக கமல்ஹாசன் அவர்கள் பேசுவார் என மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதற்கிடையே பெண்களிடம் சில்மிஷம் செய்பவர் என கூறப்படும் அசல் சக போட்டியாளரான நிலாவை காதலிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஒரு இடத்தில் நிலா புடவை கட்டிக்கொண்டு வந்த போது உடனே அசல் அமர்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்து நிலாவிடம் செல்கிறார். அப்போது ஏ டி கே இனி அசல் திரும்பி வரமாட்டான் அங்கேயேதான் சுத்திகிட்டு இருப்பான் என கூறுகின்றார் இதனால் அசல் நிலா காதல் ஜோடிகளாக மாறி இருப்பதாக கூறப்படுகின்றது.