விஜய் தொலைக்காட்சியின் பிரம்மாண்ட நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 6 வருகிற ஒன்பதாம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. கமல்ஹாசன் முன் நின்று தொகுத்து வழங்க இருக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் போட்டியாளர்கள் பற்றி தொடர்ந்து பல தகவல்கள் வெளியாகி வருகிறது. இதில் ஜிபி முத்து, பாரதி கண்ணம்மா ரோஷினி, ரக்சன், ராஜா ராணி அர்ச்சனா, தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, அஞ்சனா ரங்கன், சீரியல் நடிகை ஆயிஷா, ராஜலட்சுமி போன்ற பல நபர்கள் இதில் கலந்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு பிரபல தொகுப்பாளர் விக்ரமன் என்பவருக்கு சென்றிருக்கின்றதாம் ஆனால் அவர் அந்த வாய்ப்பை நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Categories