பிங்க் நிற வண்ணம் பூசப்பட்ட சில மாநகரப் பேருந்துகளில் பச்சை நிற பலகை பொருத்தி கட்டணம் வசூலிப்பதால் பெண்கள் அதிர்ச்சி அடைகின்றார்கள்.
மாநகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என தமிழக அரசு அறிவித்திருக்கின்றது. இதனால் வேலைக்குச் செல்லும் பெண்கள் என அனைவரும் பேருந்தில் இலவசமாக சென்று வருகின்றார்கள். சில நேரங்களில் பெண்கள் வெள்ளை நிற பெயர் பலகை போட்ட பேருந்தில் ஏறுவதற்கு பதிலாக பச்சை நிற பெயர் பலகை போட்ட பேருந்தில் இலவசம் என நினைத்து ஏறி விடுகின்றார்கள். பின் கண்டக்டர் டிக்கெட் கிடைக்கும்போது தகராறில் ஈடுபடுகின்றார்கள்.
இதனால் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் பேருந்தை அடையாளம் காண்பதற்காக மாநகரம் வெள்ளை நிற பெயர் பலகை போட்டு வரும் பேருந்து முன் பக்கமும் பின் பக்கமும் பிங்க் நிறம் அடிக்கப்பட்டது. அத்துடன் பேருந்து முன் பகுதியில் பெண்களுக்கு கட்டணம் இல்லை என ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டது. இந்த நிலையில் பின் பிங்க் வர்ணம் பூசப்பட்ட சில மாநகரப் பேருந்துகளில் பச்சை நிற பெயர் பலகை பொருத்தி வருவதாக சொல்லப்படுகின்றது. பிங்க் நிற பேருந்தை பார்த்ததும் பெண்கள் இலவசம் என ஏறி பின் கண்டக்டர்கள் டிக்கெட் கேட்கும் பொழுது அதிர்ச்சி அடைகின்றார்கள். சில நேரங்களில் கண்டக்டர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபடுகின்றார்கள். அப்போது சிலர் டிக்கெட் எடுக்க மறுப்பதால் பாதி வழியிலேயே பேருந்தில் இருந்து இறக்கி விடுவதாக கூறுகின்றார்கள்.